சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐஐடியில் படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்ற மாணவன் திடீரென நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை அடுத்து, அவரது உடல் ஐஐடி வளாகத்தில் உள்ள காந்தி மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக ஐஐடி வளாகத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது.
அடுத்த கட்ட விசாரணையை பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தொடங்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.