• Mon. Dec 11th, 2023

இந்திய விமானங்களுக்கான தடை மேலும் நீடிப்பு!

Jul 27, 2021

அமீரகத்தில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் ஆனது பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் பிற நாடுகளிலிருந்து வரும் விமான போக்குவரத்து ரத்து செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தடை விதித்து உள்ளதாக தேசிய விமான சேவையான எட்டிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் காரணமாக, கண்டா அரசும், இந்தியாவில் இருந்து உள்வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.