• Mon. Oct 2nd, 2023

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

Apr 4, 2022

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் பொது மக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை சுய விருப்பத்தின் மூலம் தொடரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.