• Tue. Apr 16th, 2024

விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சந்திரசேகர ராவ் கோரிக்கை

Nov 20, 2021

இந்தியாவின் டெல்லியில் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெலுங்கானா

நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில் பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுகளும் வெளிவந்தன.

இந்த நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி இன்று கூறும்போது, வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு எங்களுடைய அரசு சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். மத்திய அரசு ரூ.25 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். உயிரிழந்த ஒவ்வொரு விவசாயியின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.