• Sat. Sep 23rd, 2023

தமிழகத்தில் மேலும் 710 பேருக்கு கொரோனா

Dec 7, 2021

தமிழகத்தில் தற்போது 7,982 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,31,945 ஆக அதிகரித்துள்ளது.

731 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 26,87,414 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 10 பேர் உயிரிழக்க, மொத்த பலி 36,549 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,00,393 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 5,49,85,621 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.