• Sun. Dec 22nd, 2024

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

Sep 11, 2021

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 1,631 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,30,592 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,631 பேர்களில் 174 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். மேலும் தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35,119 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.