இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,857 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 286 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,82,914 ஆக உயர்ந்துள்ளது. இதில் 60,64,856 பேர் குணமடைந்துவிட்டனர்.
இதேவேளை மும்பையில் புதிதாக 404 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது செவ்வாய்க்கிழமையைக் காட்டிலும் 6 எண்ணிக்கை கூடுதல் ஆகும் . மேலும் 382 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6 பேர் பலியாகியுள்ளனர்.