• Thu. Nov 21st, 2024

இந்தியாவில் விற்பனைக்கும் வரும் கொரோனா தடுப்பூசிகள்!

Jan 27, 2022

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கோரி இருந்தன.

மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அளித்தன. இது ஜனவரி 19 அன்று கொரோனா தொடர்பான நிபுணர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு சந்தை விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனை புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள், 2019ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சினை (தடுப்பூசிகள் ) இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம்.

அதே வேலை தடுப்பூசிகள் மெடிக்கல் கடைகளில் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் தங்கள் கொள்முதல் ,விற்பனை செய்துள்ள தடுப்பூசி விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையத்திடம் 6 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் தடுப்பூசி கொள்முதல் ,விற்பனை தகவல்களை கோவின் இணையதளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது