• Wed. Dec 18th, 2024

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Jul 16, 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு வருகிற 19 ஆம் திகதி நிறைவடைகின்றதாகவும், அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்றும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.