• Thu. Jul 25th, 2024

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு – புயல் எச்சரிக்கை

Sep 13, 2021

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது.

இந்நிலையில் வங்க கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எண்ணூர், சென்னை, நாகப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.