• Mon. Dec 2nd, 2024

சென்னையை உலுக்கிய மருத்துவர் படுகொலை சம்பவம்: 7 பேருக்கு தூக்குத் தண்டனை!

Aug 5, 2021

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் சுப்பையாவின் தாய் மாமனுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை ஏற்பட்டது.

3 தலைமுறைகளாக நீடித்து வந்த நிலப்பிரச்சினையில் இந்த நிகழ்ந்த கொடூரம். நிகழ்ந்து உள்ளது.

சொத்துக்காக நடந்த இந்த கொலை வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.அரசு தரப்பில் 57 சாட்சிகளை விசாரணை செய்து 173 ஆவணங்கள், 42 சான்றுகள் குறியீடு செய்யப்பட்டன.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 3 சாட்சிகளை விசாரித்து 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.கைதான 10 பேரில், ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனதால் விடுவிக்கப்பட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஆகஸ்டு 2ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்கள் இருவரும் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோர் ஆஜராகாத காரணத்தால் தீர்ப்பை இன்று தள்ளிவைப்பதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டிஇருந்தார்.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டுள்ளது அதில் கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் தவிர குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றஞ்சாற்றபட்ட பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு தூக்கு தண்டனையும்,மேரி புஷ்பம்,கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த பொன்னுசாமி, அவரின் மகன்கள் பாசில், போரிஸ் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்திகரமாக உள்ளது நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் நன்றி என சுப்பையா மனைவி கூறியுள்ளார்.

நீண்ட காலமாக நடந்த வழக்கில் வரலாற்றில் பதிய வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என கூறினார். வழக்கறிஞர் கூறியுள்ளார்.