• Mon. Dec 2nd, 2024

நிபா வைரஸ் எதிரொலி – தமிழக எல்லையில் மருத்துவக்குழு

Sep 7, 2021

கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தமிழக எல்லையில் பரிசோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு நிபா வைரஸ் சோதனை மேற்கொள்ள கேரள – தமிழக எல்லை வழித்தடங்கள் அனைத்திலும் சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபா அறிகுறி உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.