• Mon. Nov 18th, 2024

இந்தியாவுக்கு எதிராக போலிச் செய்தி – 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்

Jan 21, 2022

இந்தியாவுக்கு எதிராக போலி செய்தி பரப்பிய 35 யூடியூப் சேனல்களை மத்திய அரசு இன்று முடக்கியது.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களைப் பரப்பும், நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படும் இணைய தளங்கள், யூ டியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக இணை செயலாளர் விக்ரம் சஹாய் கூறுகையில்,

35 யூடியூப் சேனல்கள், 2 டுவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு ஆகியவை முடக்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்ததால் இணையதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.