• Sat. Sep 23rd, 2023

தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்தது

Oct 9, 2021

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.35,504க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.35,504க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,438க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு உயர்ந்து ரூ.65.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.