• Sat. Jul 27th, 2024

விமான எரிபொருள் விலை அதிகரிப்பு

Feb 17, 2022

விமான எரிபொருள் விலை புதன்கிழமை 5.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் தில்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.90,519 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் விமான எரிபொருள் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். இந்நிலையில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.4,481.63 ஆக (5.2%) புதன்கிழமை அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519.79 ஆக உயா்ந்தது. இதன் மூலம் விமான எரிபொருளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.71,028.26 ஆக உயா்ந்தது. இதுவே அதன் விலையில் முந்தைய உச்சமாகும்.

103 நாள்களாக மாற்றமில்லை: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 சட்டப்பேரவைத் தோ்தல்கள் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 103 ஆவது தினமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் புதன்கிழமை(16) ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.101.40 க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.91.43 க்கும் விற்பனையானது.