• Mon. Dec 23rd, 2024

தமிழகத்தில் இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Jul 26, 2021

தமிழகத்தில் சாதாரண பஸ்களில், இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வரான உடன், சாதாரண பஸ்களில் மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, சாதாரண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

தற்போது இயங்கும் பஸ்களில், மூன்றில் ஒரு பங்கு பஸ்கள், சாதாரண பஸ்களாக இயக்கப்படுகின்றன. இவற்றில், இம்மாதம்12ம் தேதி வரை, 367.13 லட்சம் மகளிர் பயணித்துள்ளனர். அதேபோல, 27 ஆயிரத்து 698 திருநங்கையர், 2.57 லட்சம் மாற்றுத் திறனாளிகள், 22 ஆயிரத்து 503 மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்களும் பயணித்துள்ளனர்.

இவர்களுடன் 249.14 லட்சம் ஆண்கள், கட்டணம் செலுத்தி பயணித்து உள்ளனர்.மொத்தம் பயணித்த 619.33 லட்சம் பேரில், மகளிர் 59.28 சதவீதம் பேர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், பஸ்களில் வழக்கமாக வசூலான தொகையில் 20 சதவீதம் கூட வசூலாவதில்லை. அதேநேரம், இலவச பயணத்துக்கான மானியத்தை அரசு வழங்குவதாக உறுதியளித்து உள்ளது.