• Mon. Jun 5th, 2023

இந்தியா – அரசு மருத்துவமனையில் தீ விபத்து 11 பேர் பலி

Nov 6, 2021

இந்தியாவின் மராட்டிய மாநிலம் அகமதுநகர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியானார்கள் 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் சிகிச்சை பெற்று வநதுள்ளனர்.இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு நோயாளிகள் என கூறப்படுகிறது.

நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயாளிகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.