ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோக நடவடிக்கை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி விநியோகம் பரிசோதனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 4 ஆம் திகதி ஆரம்பித்து வைத்துள்ளதார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன், முதல் முறையாக தெற்கு ஆசியாவில் கொரோனா தடுப்பூசியை 15 கி.மீ தூரத்துக்கு 12 முதல் 15 நிமிடங்களில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்ட வை்தியசாலையிலிருந்து இருந்து கரங் தீவில் உள்ள லோதக் ஏரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த இடங்களுக்கு வீதி வழியான தூரம் 26 கி.மீ ஆகும். லோதக் ஏரியில் 10 பேர் முதல் டோஸ் தடுப்பூசிகளையும், 8 பேர் 2 ஆவது டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டனர்.
தற்போது மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கான்பூர் ஐஐடியுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.