• Fri. Jan 3rd, 2025

18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க இந்தியா தீர்மானம்

Sep 8, 2021

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து 18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி 18 நாடுகளை சேர்ந்த 49 நகரங்களுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா இணையத்தளம் மூலம் மேற்கொள்ள முடியும் எனவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

எனினும் கொரோனா தொற்றின் பரவலுக்கு ஏற்ப குறுகிய கால அறிவிப்பில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.