• Sat. Apr 20th, 2024

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

Oct 28, 2021

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் இன்று அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை மூன்று பிரிவுகள் கொண்டது என்பதும் இந்த ஏவுகணை மூலம் 700 கிலோ மீட்டர் முதல் 3500 கிலோமீட்டர் வரை ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதங்களை ஏந்தி கொண்டு எதிரிகளை துவம்சம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்திற்கு உகந்ததாக இருக்கும்.

மேலும் விரைவில் இந்திய ராணுவத்துடன் இந்த ஏவுகணை இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.