• Mon. Jun 5th, 2023

இந்தியாவில் தங்கியிருந்த 30 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது!

Jun 11, 2021

இந்தியாவின் கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதனையடுத்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் 6 முதல் 7 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.