• Tue. Sep 10th, 2024

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சி

Mar 30, 2022

புதுச்சேரியில் திமுக கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர் பகுதியில், அமைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் திடீரென அகற்றியுள்ளனர். இந்நிலையில் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பாஜக கொடி கம்பங்களை அகற்றாமல், திமுக கொடி கம்பங்களை மட்டும் திட்டமிட்டு

எந்தவித முன்னறிவிப்புமின்றி அகற்றிய புதுச்சேரி நகராட்சியை கண்டித்து, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலிசார், மீண்டும் திமுக கொடி கம்பம் அதே இடத்தில் வைக்கப்படும் என உறுதியளித்தின் பேரில், திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் திமுக நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், தொகுதி செயலாளர் நடராஜன், வழக்கறிஞர் ஞானராஜா, சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.