• Mon. Dec 2nd, 2024

டெல்லியில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Nov 16, 2021

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 40 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால், டெல்லியில் கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 40 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை கொரோனா பாதிப்பால் டெல்லியில் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 95 என்ற அளவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.