இலங்கை வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
இவ்வாறு இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை தரப்பு நிரகரித்துள்ளதாக கடந்த வார இறுதியில் வெளியாகிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் எந்த உண்மையும் கிடையாது என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரலாயம் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.