• Thu. Dec 26th, 2024

பாஜக தலைமை அலுவலகத்தில் பெற்றோல் குண்டு வீச்சு

Feb 10, 2022

சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது.

நேற்று(09) நள்ளிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அடுத்தடுத்து 3 பெற்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு மர்ம நபர்கள் பெற்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து பாஜக தலைமை அலுவலகம் வந்த துணை ஆணையர் மற்றும் பொலிஸார், பாஜக அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.