அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் இன்று 76-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ஐ.நா.சபையில் இன்று உரையாற்றினார்.
இதன்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி ஐ.நா. சபையில் பேசினார்.
இது தொடர்பாக ஐ.நா.சபையில் பிரதமர் மோடி பேசுகையில்,
கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான பெருந்தொற்றை கடந்த 1.5 ஆண்டுகளாக உலகம் எதிர்கொண்டுவருகிறது.
இந்த கொடிய கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.
அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றும் மோடி தெரிவித்தார்.