புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது சென்னை மாநகர காவல்துறை.
அந்த அறிவிப்பில்,
- புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும்.
- மெரினா, எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூடவேண்டாம்.
- ரிசார்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்களில் வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
- ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை, DJ, இசை நிகழ்ச்சிகளுக்கு தடை.
- அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் ஒன்றுகூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
- மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையும், காமராஜர் சாலை, பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் செல்லத் தடை.
- 31ஆம் தேதி இரவு பைக் ரேஸ், அதிகவேகமாக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை.
- ஹோட்டல்கள், தங்கும் வசதியுள்ள உணவு விடுதிகள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.
- தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உணவு விடுதிகள் செயல்பட அனுமதி.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.