தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த நிலையில் அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாகலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நாகலாந்து ஆளுநர் பதவி அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட் ஆளுநர் பதவி வகித்த பேபி ராணி மவுரியாவின் இராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதேவேளை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி (வயது 69) பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.