டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி. சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் இன்று டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கொண்டுவரப்பட்டனர்.
அறை எண் 207 யில் அவர்கள் சென்றபோது அவர்களை நோக்கி வக்கீல் உடையில் இருந்த கோகியின் எதிர்கோஷ்டியினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பாதுகாப்புக்காக வந்து இருந்த பொலிசார் எதிர்கோஷ்டியை நோக்கி சுட்டனர். அங்கு சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இந்நிலையில், பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.