இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில் அந்நாட்டின் நிதி மந்திரி இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் அண்டை நாட்டினருக்கு முக்கியத்துவம் என்ற கொள்கையில் இலங்கை முதன்மையாக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா எரிபொருள் மற்றும் பண உதவிகள் வழங்கியுள்ள நிலையில் இலங்கைக்கு மேலும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.