• Fri. Feb 7th, 2025

இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பும் தலிபான்கள்!

Aug 30, 2021

இந்தியாவுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார உறவுகளை தொடர தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளன.

சமூகவலைத்தளம் மூலம் பேசிய தலிபான்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேர் அப்பாஸ் ஸ்டேன்கசாய் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த காணொலியில் மேலும் தெரிவித்துள்ள அவர், இந்தியா இந்த துணைக்கண்டத்தில் மிக முக்கியமான நாடு எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவுடனான வான்வழி வர்த்தகத்திற்கான வழிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.