
கர்ப்பிணியான தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை அகதியை தேடி தமிழக பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு காந்திமா நகரில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய பொலிசார் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, ராமேஸ்வரம் ஊடாக அவர் இலங்கைக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரான பழைய கட்டடங்களை இடிப்பதில் ஈடுபட்டுள்ள 49 வயதான லாவேந்திரன் என்ற குமார், தனது 32 வயதுடைய மனைவி எல்.கவிதாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம்பட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.