• Tue. Dec 5th, 2023

தமிழகத்தில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்; குடிமகன்கள் மகிழ்ச்சி

Jun 13, 2021

தமிழகத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஒரு சமயத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மதுபானங்களை மொத்தமாக ஒருவருக்கே விற்பனை செய்யக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது,

அனைத்து மதுக்கடைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை கண்காணிக்க இரண்டு பணியாளர்கள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.