• Sat. Dec 7th, 2024

காந்தியின் அஸ்தி தங்களிடம் இருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்திய ஆச்சிரமம்

Jan 31, 2022

மகாத்மா காந்தியின் அஸ்தி தங்களிடம் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரமம் ஒன்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1948ம் ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்டதால் இறுதிச் சடங்குகளுக்குப் பின் அவரது அஸ்தி 20க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் சில வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காந்தி உலக அமைதி நினைவுச் சின்னம் உள்ளது.

இதனை 1950ல் பரமஹன்ச யோகானந்தா என்பவர் நிறுவியதாகக் கூறப்படுகிறது. தற்போது அங்கு காந்தியின் அஸ்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் இதனை காந்தியின் வழித்தோன்றல்கள் மறுத்துள்ளனர்.