• Tue. Jul 23rd, 2024

இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா புதிய வகை கொரோனா?

Oct 26, 2021

இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட மிக முக்கிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் இன்னும் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

இதற்கிடையே AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது என்று இந்தியன் சார்ஸ் – கோவிட் 2 ஜீனோமிக் கன்சார்டியம் (INSACOG) என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட இந்த புதிய மாறுபாடு அடைந்த வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் எந்த அளவுக்கு தீவிரமானது, மோசமானது என்பது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால், முந்தைய மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் கிருமிகளைக் காட்டிலும் ஆறு மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மாறுபாடு அடைந்த வைரஸ் ஆல்ஃபா, டெல்டா ஆகும். அதை ஒப்பிடுகையில் இந்த வைரஸ் வேகமாக பரவும் வகையில் இல்லை என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆல்ஃபா, டெல்டா வகை வைரஸ் கிருமிகள் 50 முதல் 60 சதவிகிதம் வரை வேகமாக பரவும் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் இந்த பிழற்வு காரணமாக அதிக பாதிப்பு ஏற்படுகிறதா என்பதையும் ஆய்வாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்டிஏ முன்னாள் நிர்வாகி கூறுகையில், “அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்பட 33 நாடுகளில் இந்த மாறுபாடு அடைந்த பிறழ்வு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஏற்படக் கூடிய கொரோனாத் தொற்றில் எட்டு சதவிகிதம் இந்த வகை கொரோனாவால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது மிக விரைவாகப் பரவக் கூடியது என்பது தொடர்பான அறிகுறிகள் தென்படவில்லை.

ஆனால் இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர்” என்றார்.