• Sat. Jul 27th, 2024

கொரோனா தொற்றுடன் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

Jun 17, 2021

மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணிப்பெண் பிரவசத்திற்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

மேலும் HELLP syndrome எனும் ரத்த ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மூன்று குழந்தைகள் என்பதால் சுவாசப்பிரச்சினை உள்பட மேலும் அதிகமான மருத்துவச் சிக்கல்கள் இருந்தன.

மிகப்பெரிய சவால்களை தாய் மற்றும் பிறக்கப்போகும் குழந்தைகள் 4 பேரும் கூடவே மருத்துவர்களும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்புப்பிரிவில் ஒரு வாரம் வைத்து பராமரிக்கப்பட்டு 8 வது நாளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

15 வது நாளில் தாய் மற்றும் 3 சேய்கள் என நால்வரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கோவிட் தொற்றுக்காலத்தில் இவ்வளவு சிக்கல்வாய்ந்த பிரசவத்தை செய்துள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழுவினர்க்கு பாரட்டுக்கள் குவிகின்றன.