இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் சற்று தணிந்திருந்தாலும், இன்னும் முழுமையாக ஆபத்தில் இருந்து மீளவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், டெல்டா வகை கொரோனாவை ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வகை தொற்று மூக்கு, தொண்டை போன்றவற்றின் திசுக்களை வேகமாக பாதிக்கும் தன்மை கொண்டது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமைக்ரானால் உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும், வயதானோர்களிடமும், தடுப்பூசி செலுத்தாதவர்களிடமும் நோயின் தாக்கம் தீவிரமாக உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.