• Tue. May 6th, 2025

இலங்கையில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால வீசா!

Mar 8, 2022

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால வீசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை வழங்கும் நோக்கில் குறித்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த யோசனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்கும் என நம்புவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும், வேலை செய்யவும் மற்றும் வாழவும் ஊக்குவிக்கும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.