• Sun. May 18th, 2025

உலகிலேயே சிகரெட்டுக்கு அதிக விலை இலங்கையில் தான்: உலக சுகாதார ஸ்தாபனம்

Mar 8, 2022

உலகிலேயே சிகரெட்டுக்காக அதிகளவு செலவழிக்கும் நாடாக இலங்கை இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அண்மைய அறிக்கை தெரிவிக்கின்றது.

2020 ஆம் ஆண்டுக்கான போக்குகள் மற்றும் இலங்கையர்களின் சராசரி தனிநபர் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இலங்கைச் சந்தையில் முறையான வர்த்தக நாமங்களில் இருந்து விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளின் அதிக விலைகள் காரணமாக, உலகளாவிய சட்டவிரோத சிகரெட் வர்த்தகத்தில் இலங்கை முன்னணி இலக்காக மாறியுள்ளதாக அறிக்கை எச்சரித்துள்ளது.

இலங்கையில் தற்போதைய சட்ட கட்டமைப் பிலுள்ள பலவீனங்களும் சட்டவிரோத புகையிலை வர்த்தகம் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.