• Fri. Feb 7th, 2025

இலங்கையில் டிசம்பர் மாதத்தின் பின்னர் 12 மணிநேர மின் துண்டிப்பு

Oct 20, 2021

நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் பின்னர் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்குக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப் படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், 200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் என கூறிய சம்பிக ரணவக்க ,நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டாலும் நாட்டின் மின்சாரத்தின் உற்பத்தியில் 45 வீத அளவு இழக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.