• Fri. Nov 1st, 2024

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி

Oct 20, 2021

நாளை 21 ஆம் திகதிக்குப் பின்னர் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

“அதற்கமைய க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதற்தடவை மற்றும் இரண்டாவது தடவையாக
தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.