• Mon. Dec 11th, 2023

இலங்கை முழுவதும் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள்

Jun 23, 2021

இலங்கை முழுவதும் இன்று(23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியால நடமாட்டக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை காரணமாக மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

வார இறுதி நாட்களில் நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.