லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம் “தாயின் நிழல்*” எனும் தாயக உதவித்திட்டதின் கீழ் திருகோணமலை மாவட்டம் மருதநகர் , பாலத்தோப்பூர் , கிண்ணியா ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் இடர் கால உதவிகள் மேற்கொள்ளப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கான கோவிட் – 19 இடர் கால நிவாரணப் உணவுப்பொதிகள் 4ம் கட்டமாக என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய நிதியுதவியுடன் 19.06.2021 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வுயரிய உன்னதமான பணியினை மேற்கொள்வதற்கு நிதி உதவியினை செய்த லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயத்தின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், மற்றும் நிதி உதவி வழங்கிய அனைத்து அடியார்களுக்கும் பயனாளிகள் அனைவரும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டனர்.