• Sun. Sep 24th, 2023

இலங்கையில் 52 பேர் கொரோனாவுக்குப் பலி

Jun 21, 2021

இலங்கையில் நேற்றைய தினம் 52 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,633ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,41,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2,07,287 பேர் குணமடைந்துள்ளதுடன், 31,552 பேர் தொடர்ந்தும் சிகிச்சைகளை பெற்று வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.