பயணத்தடை நிலவும் காலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று(06) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் நுவரெலியா மற்றும் வட்டவளை பொலிஸ் பிரிவுகளில் இடம் பெற்ற விபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர் என பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவற்றில் ஐந்து மரணங்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.