பல தசாப்தகாலங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருடிக்கடிக்கு தீர்வை காண இலங்கைக்கு உதவுவதற்காக 1.5மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றதாகவும் விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் தெரிவித்துள்ளார்.
இதுதவிர இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவி குறித்தும் ஆராயப்படுவதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 18 ம் திகதி சீனாவின் அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 500 மி;ல்லியன் டொலர்களை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மருந்துகள் போன்ற அவசியமான இறக்குமதிகளிற்கான கட்டணங்களை செலுத்துமுடியாமல் திணறும் இலங்கை போதியளவு எரிபொருள் இன்மையால் மின்;வெட்டை நடைமுறைப்படுத்துகின்றது.
சீனாவின் கடன்களை மறுசீரமைப்பு செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சீன தூதுவர் இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வை காண்பதே எங்கள் நோக்கம் ஆனால் இதற்கான பல வழிகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பானிற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு அதிக நிதி உதவியை வழங்கும் நாடு சீனா.
பெருந்தெருக்கள்,விமானநிலையம் அனல் மின்நிலையம் துறைமுகம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக கடந்த தசாப்தகாலத்தில் இலங்கைக்கு சீனா ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
ஆனால் இந்த நிதி மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கவில்லை என விமர்சகர்கள் தெரிவிக்கி;ன்றனர்-இதனை சீனா நிராகரித்துள்ளது.
ஜனவரி மாதம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜியை சந்தித்தவேளை கடன்களை மீளப்பெறுவதை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார் ஆனால் சீனா இதுவரை இது குறித்து பதிலளிக்கவில்லை.
சீனாவிற்கு இலங்கை 400 முதல் 500 மி;ல்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தவேண்டியுள்ளது எனநிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என ராஜபக்ச கடந்தவாரம் தெரிவி;த்தார்.
பேச்சுவார்த்தைகள் ஏப்பிரல் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளன.