• Sun. Feb 9th, 2025

ஐநாவில் பிற்போடப்பட்டது இலங்கை தொடர்பான விவாதம்

Mar 1, 2022

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் பிற்போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவநடவடிக்கையினால் உருவாக்கியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்;டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவநடவடிக்கை தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறும்.

அதேசமயம் இதுதொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் 47 உறுப்புநாடுகளில் 29நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.