• Fri. Nov 22nd, 2024

பிரான்ஸ் – இலங்கை இடையிலான நேரடி விமான சேவை

Sep 7, 2021

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இந்த விமான சேவை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரான்சின் சார்ல்ஸ் டீ கோல் விமானநிலையம் வரை நேரடி சேவையாக ஆரம்பிக்கவுள்ளது.

புதன் ,வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன. சேவையில் ஈடுபடவுள்ள A330-300 aircraft என்ற விமானத்தில் 297 பேர் பயணிக்கக்கூடியதாக இருக்கும்.

இதேவ‍ேளை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் விதிக்கப்பட்ட விதிகளை தளர்த்தி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த வாரம் மாகாண மற்றும் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2 டேஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட மற்றும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த சுற்றுலாப் பயணிகள், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக சுற்றுலா தளங்களை பார்வையிட பயணிக்கலாம்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையிலும் இந்த விதிமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு பயணிக்க அனுமதி உண்டு என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜயசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.