• Sun. Dec 8th, 2024

நான் ஆரோக்கியமாக உள்ளேன் – மஹிந்த ராஜபக்ஷ

Aug 28, 2021

இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சமூக தளங்களில் செய்திகள் பரவிக்கொண்டுள்ள நிலையில், அவ்வாறு அவர் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கவில்லை எனவும், தான் ஆரோக்கியமாக அலரிமாளிகையில் இருந்துகொண்டு தனது பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று காலையில் தான் அலரிமளிகையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாகவும், அரசியல் பிரமுகர்களை சந்தித்து நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளதுடன், நாட்டை தொடர்ந்து முடக்கி வைத்திருப்பது பொருளாதாரத்தை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் எனவும், நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.