• Mon. Sep 9th, 2024

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பின் வீதிகளுக்கு பூட்டு!

Jan 31, 2022

சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பில் உள்ள 21 வீதிகள் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள இந்த 21 வீதிகளும் காலை 5 மணி முதல் சுதந்திர தின நடவடிக்கைகள் முடியும் வரை மூடப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அழைப்பிதழ் மற்றும் அந்தந்த கார் பார்க்கிங் விபரங்களைக் காண்பிக்கும்போது, பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 7:30 மணி வரை, அழைப்பாளர்கள் தங்கள் வாகனங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடத்திற்குச் செல்லலாம் என்றும் அவர் அறிவித்தார்.